• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாஸ்க் போடலன்னா மது இல்ல..!

Byவிஷா

Jun 28, 2022

சென்னையில் மதுப்பிரியர்களுக்கு மாஸ்க் போடலன்னா மது இல்லை என டாஸ்மாக் நிர்வாகம் கண்டிஷன் போட்டிருப்பது மதுப்பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை மீண்டும் கண்டிப்புடன் பின்பற்றுமாறு மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
“தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் முக கவசம் அணிவதை கண்டிப்புடன் பின்பற்றுமாறு அரசு தெரிவித்துள்ளது. எனவே சென்னை முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் முக கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மதுவகைகள் வழங்க வேண்டும் என்பதுடன், மது வாங்க வருவோரை கூட்டமாக நிற்க அனுமதிக்கக் கூடாது. இடைவெளி விட்டு நிற்க வைக்க வேண்டுமென ஊழியர்களை அறிவுறுத்துமாறு மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சென்னை முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களும் முக கவசத்தை சரியான முறையில் அணிந்து இருப்பதுடன், அவர்கள் தங்களின் கைகளை அடிக்கடி கிருமிநாசினியாக சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். கடைகளில் தினமும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றவில்லை எனில் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.