தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்குச் செல்லவும் தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்தது. இதையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதியான இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.கடற்கரைக்கு தங்களது குடும்பங்களுடன் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதனை கண்காணிக்க மாநகராட்சி பணியாளர்கள், போலீசார் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.விதிகளை பின்பற்றாமல் இருப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு தமிழக அரசு அமல்படுத்தியது.
அதுமட்டுமில்லாமல் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்லவும், அனைத்து நாட்களும் கடற்கரைகளுக்குச் செல்லவும் தடை விதித்திருந்தது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு ரத்து செய்தது.
இதையடுத்து, பிப்ரவரி 1-ம் தேதியான இன்று முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.