கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 11-ந் தேதி கம்பம் வழங்கல் மற்றும் நடுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 16-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 26-ந் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் மா விளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு காவடி உள்ளிட்டவை எடுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். 26-ந் தேதி தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவையொட்டி இன்று மதியம் கோவில் நடை சாத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. கம்பம் ஆற்றுக்கு செல்லும் வழியெங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாலையோரத்தில் காத்திருந்து கம்பத்தை தரிசனம் செய்தனர். அமராவதி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை குளத்தில் கம்பம் விடப்பட்டது. அதனை தொடர்ந்து அமராவதி ஆற்றில் வானவேடிக்கை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், மேயர், துணை மேயர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், லட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.






; ?>)
; ?>)
; ?>)
