
குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தினை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திறந்து வைத்தார்
கரூர் மாவட்டம் குளித்தலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தினை இன்று குளிச்சலைப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் வரும் ஜூன் 14ஆம் தேதி திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி நடைபெற உள்ளதாகவும், ஒன்றிய பாசிச பாஜக அரசின் மதச்சார்பை கண்டித்து நடைபெறும் இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான விசிகவினர் கலந்து கொள்ள வேண்டும் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவ குளத்தை சேர்ந்த மறைந்த விசிக நிர்வாகி ராம்குமார் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஆலத்தூரில் நடைபெற்ற காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
