மார்ச் 21ஆம் தேதியன்று திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை வழங்குவதற்கு தமிழக அரசால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் ஆழித்தேர் திருவிழாவானது வருடம் தோறும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் வரும் 21ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இதனால் திருவாரூர் ஆழிதேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு திட்டமிட்டபடி அந்த நாளில் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.