• Tue. Feb 18th, 2025

பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

Byவிஷா

Mar 9, 2024

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் பிரச்சார வாகனத்தை பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..,
வளர்ச்சியடைந்த பாரதம், மோடியின் உத்தரவாதம் என்ற செய்தியை தாங்கி, ஒரு மக்களவைத் தொகுதிக்கு 2 வாகனம் வீதம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து கருத்து கேட்கும் பெட்டியை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். வரும் 20-ம் தேதி வரை வைக்கப்படவுள்ள பெட்டியில் பெறப்படும் கருத்துகள் அனைத்தும் நமோ செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
கூட்டணி கட்சிகளைப் பொருத்தவரை எப்போதும் தேசிய தலைமைதான் பங்கீட்டை பேசி, தொகுதியை ஒதுக்குவார்கள். அதில் எங்களால் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.