ஒடிசா காட்டில் பதுங்கி இருந்த 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். கலஹண்டி பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்ட படையினரை பார்த்ததும் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்ட்டரில் 3 மாவோயிஸ்டுகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டு சுட்டுக்கொலை!
