கனியாமூர் மரணமடைந்த மாணவியின் உடல் சொந்தஊருக்கு கொண்டுவரப்பட்டு பொற்றோர் ,உறுவினர்கள் உட்பட ஏரானமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல் இன்று அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவியின் உடல் அவரது சொந்த ஊருக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வழியில் சிறிய விபத்தில் சிக்கிய நிலையில், மாணவியின் உடல் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மாணவியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டதை அடுத்து ஏராளமான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், மாணவியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி செலுத்தினார். காலை 11 மணியளவில் இறுதி நிகழ்ச்சி நடைபெறும் என் தெரிகிறது. மேலும் அவரது இறுதி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாணவியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி













; ?>)
; ?>)
; ?>)