• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விரைவில் திருமண வைபவத்தில் மஞ்சிமா மோகன் கெளதம் கார்த்திக் ஜோடி…

நடிகர் கெளதம் கார்த்தியும் மஞ்சிமா மோகனும் ‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்ததில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் இவர்களுக்கு திருமணம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அடிக்கடி காதல் கிசுகிசுவில் சிக்குவது வழக்கமான ஒன்று தான். அப்படி சிக்கும் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் தங்களது காதலை மறுத்தாலும், பின்னர் திருமண வாழ்க்கையில் இணைகிறார்கள். சமீபத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் காதல் காதல் கிசுகிசுவில் சிக்கிய ஜோடி, மஞ்சிமா மோகன் கெளதம் கார்த்திக் ஜோடி எனலாம். மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மஞ்சிமா மோகன், தமிழில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகனார்.

இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதல் படத்தை தவிர அவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்தாலும், கடைசியாக வெளியான FIR திரைப்படம் வெற்றி பெற்றது.தற்போது இவரது கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி வரும் “October 31st Ladies Night’ என்கிற படம் மட்டுமே உள்ளது.இந்நிலையில் இவர் நடிகர் கெளதம் கார்த்தியுடன் இணைந்து தேவராட்டம் படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் தீ பற்றிக்கொண்டதாக கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில், கெளதம் கார்த்திக் தொடர்ந்து, மௌனம் காத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர்களது திருமண செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.