• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நீலகிரியில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் திறப்பு

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் கரண்டிகள், முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பினாஸ்டிக் வாழை இலை வடிவத்தாள்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்ற ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
இதில் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்ட நிலையில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை கருத்தில் கொண்டு உதகை சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை போட்டு மஞ்சப்பை பெற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த இயந்திரத்தை பல்வேறு ஆய்வு பணிகளுக்காக வந்திருந்த சட்டமன்ற பேரவை நிறுவன குழுவினர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் சட்டமன்ற பேரவை பொது நிறுவன குழு தலைவர் எஸ் ஆர் ராஜா, மானாமதுரை சட்டமன்ற தொகுதி தமிழரசி,மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட சட்டமன்ற பேரவை குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.