• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மாணவர்களின் ஆசையை நிறைவேற்றிய விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்..,

ByKalamegam Viswanathan

Sep 14, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சம்பாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக காலை உணவு திட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்களின் குவளை குறிக்கோளை கேட்டு அறிந்தார். அதில் ஒவ்வொரு மாணவர்களும் டாக்டர் இன்ஜினியர் போலீசார் என கூறினர். ஒரு சில மாணவர்கள் பைலட்டாக வேண்டும் என கூறினார். அவர்களுக்கு விமானத்தை பார்த்து உள்ளீர்களா என்று கேட்டது, வானத்தில் தான் பார்த்துள்ளோம் என கூறியதை எடுத்து, பள்ளியில் உள்ள 175 மாணவர்களுக்கும் தனியாக வாகனங்கள் ஏற்படுத்தி, மதுரை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று விமான நிலைய முனைய அலுவலக மாடியில் மாணவர்கள் சென்று விமானம் ஏறுவதையும், இறங்குவதையும் ரசித்தனர். இதனை தொடர்ந்து மாணவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் விமான பைலட் ஆக வேண்டும் என கூறியதை பள்ளிக்கு வருகை தந்த எம்.பி மாணிக் தாகூர் எங்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்தார். அதற்கு நன்றி. விமானத்தை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் எங்களது லட்சியம் நிறைவேறும் என கூறினர்.
பள்ளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மாணவர்களையும் தனது சொந்த செலவில் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று விமானத்தை பார்க்க வைத்து மகிழ்வித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்பி.