புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் ஒரு மாத மாங்கனித் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா வரும் ஜூலை 08 மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஜூலை 09காலை காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம், ஜூலை 10 மாங்கனி திருவிழா முக்கிய நிகழ்வான சிவபெருமான் வீதியுலா வரும்போது மாங்கனி வீசி வழிபடுவது நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.

இதனை முன்னிட்டு இன்று மாங்கனித் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பந்தகாலுக்கு பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது. பின்பு மகா தீபாராதனை செய்யப்பட்டது. ஆலய நிர்வாக அதிகாரி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.