• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

மங்களூர் சர்வதேச விமான நிலையத்தின் பெயர் மாற்றம்..!!

ByA.Tamilselvan

Nov 5, 2022

வரும் டிசம்பர் 1ம்தேதி முதல் மங்களூர் சர்வதேச விமானநிலைய பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகிஉள்ளது.
மங்களூரு அருகே உள்ள பஜ்பே பகுதியில் மங்களூர் சர்வதேச விமான நிலையம் இயங்கி வருகிறது. இது கர்நாடகத்தில் பெங்களூரு விமான நிலையத்திற்கு அடுத்தப்படியாக உள்ளது. இந்த நிலையில் மங்களூர் விமான நிலையம் என்ற பெயரை அடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் மங்களூரு சர்வதேச விமான நிலையம்' ஆக மாற்றப்படுகிறது. மங்களூர் நகரின் பெயர்மங்களூரு’ என்று மாற்றப்பட்டதை தொடர்ந்து `மங்களூரு சர்வதேச விமான நிலையம்’ என்று பெயர் மாற்றப்படுகிறது. இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கவும், மேம்படுத்தவும் கடந்த அக்டோபர் மாதம் முதல் 50 ஆண்டுகளுக்கு அதானி குழுமத்தின் வசம் ஒப்படைக்கபட்டது குறிப்பிடத்தக்கது.