மதுரை மாவட்டம் மேலூர் அருகே பூதமங்கலம், பொட்டபட்டி பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் (21). இவர் ராகவி (23) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். கணவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் இரவில் திருச்சி மதுரை அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் பைக்கில் சென்ற போது, பின்னால் வந்த கார் மோதியதில் இருவரும் கீழே விழுந்தனர். பின் காரில் இருந்த நபர்கள் சதிஷ்குமாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

ராகவி படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் வீட்டு தரப்பில் எதிர்ப்பு இருந்ததாக கூறப்படும் நிலையில், பெண்ணின் சகோதரன் மற்றும் உறவினர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.