கொடைக்கானலில் பெட்டி கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பூண்டி பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து அரசு அனுமதி இன்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் நல்லதம்பி(36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாடல்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.