• Mon. Jan 20th, 2025

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் கார்.. 456 கி.மீ வரை பயணம் செய்யும் புதிய மாடல்!

Byகாயத்ரி

Sep 10, 2022

ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ஓடும் புதிய மாடல் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளதை அடுத்து இந்த கார் தற்போது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் எலக்ட்ரிக் கார் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்திய கார் தயாரிக்கும் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மஹிந்திரா நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை தயார் செய்து உள்ளது. XUV400 என்ற மாடலில் எலக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிலோ மீட்டர் ஓடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை சார்ஜ் செய்தால் சென்னையிலிருந்து மதுரை வரை செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் கார் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.