• Sun. Oct 6th, 2024

மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?

ByA.Tamilselvan

May 26, 2022

இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி நேரத்திற்குமேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.மைலும் அவர்கைதாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.பல தரப்பிலும் நெருக்கடிகள் வலுத்ததால், கடந்த 9ம் தேதி பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்தார். மகிந்த ஆதரவாளர்கள் சுமார் 3000க்கும் மேற்பட்டோர், பிரதமர் இல்லம் அருகே போராட்டம் நடத்திய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். . இதனால் இலங்கையில் பெரும் கலவரம் வெடித்தது. அரசுக்கு எதிராக ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள், இந்த தாக்குதல் சம்பவத்தால் மேலும் கோபமடைந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, முன்னாள் நிதி அமைச்சர் சமல் ராஜபக்சேவின் பூர்வீக வீடுகளும் எரிக்கப்பட்டன.
இந்த வன்முறையில் ஆளுங்கட்சி எம்பி உட்பட 8 பேர் பலியாகி நாடே போராட்டக்களமாக மாறி உள்ளது. இதையடுத்து மே 9ம் தேதி நடந்த கொழும்பு வன்முறை குறித்து கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இலங்கையில் மே 9ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் சிஐடி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கொழும்புவில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சவிடம் சிஐடி போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வன்முறை வழக்கில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே கைது செய்யப்படுவாரா? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *