• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மகாகவி பாரதியாரின் பிறந்தநாளுக்கு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Byகுமார்

Dec 11, 2021

மகாகவி பாரதியாரின் 140வது பிந்தநாளையொட்டி பல்வேறு கட்சியினர், அமைப்பினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தன்னுடைய கவிதைகளால் இந்தியாவின் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140 வது பிறந்தநாள் விழா மற்றும் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் மதுரையில் பாரதியார் தமிழாசிரியராக பணிபுரிந்து புகழ்பெற்ற சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் உள்ள பாரதியாரின் மார்பளவு சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணனன், மதசார்பற்ற ஜனதா தளம், தமிழ்நாடு பிராமணர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் பேண்ட் இசை மூலம் பாரதியார் பிறந்தநாளை கொண்டாடினர்.