

மதுரை, அலங்காநல்லூர், பெரிய இலந்தைக்குளம் நல்லதங்காள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் முன்பாக வேதியர்கள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாகுதி நடைபெற்றது.
ஹோமத்தை தொடர்ந்து, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. புனித நீரானது, பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் விழாக் குழுவினர் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்கான ஏற்பாடுகளை, நல்லதங்காள் ஆலய பங்காளிகள் செய்து இருந்தனர்.


