மதுரை மக்களின் உயிர் காக்கும் இரத்ததான சேவை பணியினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்ற தன்னார்வலர் நியாஸ், மதுரை மாவட்டத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றார். அரசு மருத்துவமனைகளில் இரத்த பற்றாக்குறையை போக்கும் விதமாக இரத்ததானம் முகாம்கள் நடத்தியும், அவசர சிகிச்சைக்காகவும், உள்நோயாளிகளின் அவசரத்தேவைக்கு இரத்தக் கொடையாளர்களை தயார் செய்து உயிர்காக்கும் உன்னதமான சேவைப்பணியாற்றி வருகிறார். மேலும், கடந்த ஆண்டு மற்ற தன்னார்வலர்களுக்கு முன்னுதாரணமாக மதுரை மட்டுமல்லால் பிற மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனை இரத்த வங்கிகளில் இரத்தப் பற்றாக்குறையை போக்கும் விதமாக, அவருடைய தலைமையில் இரத்த தான கொடையாளர்களை தயார் செய்து, உயிர் காக்கும் அற்புத பணியினை செய்து மக்கள் போற்றும் சேவகராக சேவையாற்றுவதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். நியாஸ் தானும் ஓர் இரத்ததான கொடையாளராக தொடர்ந்து 22 முறைக்கு மேல் இரத்த தானம் செய்துள்ளார். இரத்ததான விழிப்புணர்வு,மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு, கல்வி விழிப்புணர்வு, மரக்கன்றுகள் நடுதல், சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல், மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைப்பணிகளை தொடர்ந்து செய்து ஆக்கப்பூர்வமான சமூகப் பணியாளராக திகழ்ந்து வருகின்றார். மேலும் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு, கேன்ஸர் நோய், தலைசீமியா நோய், எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்ற விழிப்புணர்வை மக்களிடம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார். இவருடைய சேவையைப் பாராட்டி மதுரை மாவட்டஆட்சித்தலைவர் குடியரசுதின விழா விருது வழங்கி கௌரவபடுத்தினார். மேலும் இரத்தவங்கி துறைத்தலைவர், இரத்த ,அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் விருதுகள் மற்றும் சமூக அமைப்பினர், அரசியல் பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் இவரது சமூக சேவையை பாராட்டி வருவது தொடர் நிகழ்வுகளாக நடைபெற்று வருகின்றது. மதுரை மாவட்ட மக்களின் மத்தியில் சேவைக்கு ஓர் உதாரணமாக திகழ்ந்து வருகின்றார்.








