• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில்

ByKalamegam Viswanathan

Mar 14, 2023

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு ஒப்புதல் தர கோரி எழுதிய கடிதத்திற்கு குடியரசு தலைவர் பதில் அனுப்பி வைத்துள்ளார்.


தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி நான் எழுதிய கடிதத்திற்கு “உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக” குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார்.அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனிதாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.தமிழகத்தின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே. என மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்