• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வெள்ளி கிளி வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த மதுரை மீனாட்சியம்மன்..!

Byவிஷா

Aug 5, 2022

வருடத்தில் ஒருமுறை மட்டுமே தரிசிக்கக்கூடிய வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளிய பக்தர்களுக்கு அருள்பாலித்த மீனாட்சி அம்மனின் தரிசனத்தை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்தனர்.

கடந்த 30ம் தேதி உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் என்றாலே பண்டிகைகளால் நிறைந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில், வரலட்சுமி விரதம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அனைத்து ஆலயங்களிலும் உற்சவங்களும் திருவிழாக்களும் தொடர்ங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. கிளியை தனது கையில் வைத்திருக்கும் அன்னை மதுரை மீனாட்சி, வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மீனாட்சி அம்மனுக்கு மட்டுமே தனியாக நடத்தப்படும் இத்திருவிழா, கடந்த 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. வழக்கமாகவே, திருவிழா நாட்களில் மீனாட்சி அம்மன் யானை, நந்தி, அன்னம், பூத வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி காலையிலும் இரவு நேரங்களில் கோவில் வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
ஆடி முளைக்கொட்டு விழாவின் 6ம் நாளான நேற்று மீனாட்சியம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் கோவில் விதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பக்தர்கள் தரிசிக்ககூடிய கிளி வாகனைத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முத்துக்கீரிடம் அணிந்து பச்சை பட்டு உடுத்தி, மாணிக்க மூக்குத்தி, வைர வைடூரிய நகைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மனை திரளான பக்தர்கள் வணங்கினர்.