• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் ஓதுவார் தற்கொலை!

Byகுமார்

Feb 8, 2022

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், கடந்த 3 ஆண்டுகளாக ஓதுவாராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் (வயது 30), ராமசாமி கோனார் தெருவில் உள்ள வடக்கு மீனாட்சிஅம்மன் கோவில் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பணி வராததால் சந்தேகமடைந்த உடன் பணியற்றுபவர், குடியிருப்பில் அவர் தங்கி உள்ள அறைக்கு வந்து பார்த்தபோது கதவு மூடி இருந்ததை தொடர்ந்து கதவை உதைத்து திறந்து பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் சோமசுந்தரத்தை கண்டதும் மதுரை திலகர் திடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முதற்கட்ட விசாரணையில், சோமசுந்தரம் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தற்கொலை செய்து கொண்டதற்க்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.