• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மரணத்திலும் இணை பிரியாத மதுரை கணவன் மனைவி…

ByKalamegam Viswanathan

Nov 26, 2023
மதுரை எஸ். எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் வயது 75 இவர் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார். அவர் தம் இறுதி சடங்கிற்காக ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டு இருந்த நேரத்தில் கணவர் இறந்த துக்கம் தாளாமல் இருந்து வந்த அவரது மனைவி தனலெட்சுமி வயது 65 அவரும் நேற்று காலை 11 மணி அளவில் மாரடைப்பால் காலமானார்.மரணத்திலும் இணை பிரியாத தம்பதிகளால் அப்பகுதியில் சோகம் நிலவியது.இவர்களது இருவரும் இறுதிச்சடங்கும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. இவர்களது சொந்த ஊர் கீரிப்பட்டி ஆகும். இவர்களுக்கு செந்தில் என்ற மகன் உள்ளார்.