• Thu. Apr 25th, 2024

மதுரை எல்லீஸ் நகர் நவராத்திரி கொலுவில்.., பேசும் பொம்மைகளாக சிறுவர், சிறுமிகள்..!

Byகுமார்

Oct 12, 2021

தமிழகத்தில் நவராத்திரி திருவிழாவின் போது கோவில்களிலும், பொதுமக்கள் தங்கள் இல்லங்களிலும் களிமண்ணால் ஆன கடவுள்களின் சிலைகளை அடுக்கி வைத்து, வண்ண விளக்குகளால் அலங்கரித்தும் கொலு அமைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தி வருவது வழக்கம்.


தொடர்ந்து நவராத்திரியின் போது கோவில்களிலும், இல்லங்களிலும் களிமண்ணால் ஆன பொம்மைகளை அடுக்கி வைத்து அலங்காரித்து வழிபாடு நடத்திவரும் நிலையில், மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள ஆனந்த விநாயகர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு களிமண்ணால் ஆன பொம்மைகளுடன், உயிருள்ள பொம்மைகளாக சிறுவர் சிறுமிகளுக்கு அரிதாரம் பூசி கடவுள்கள் போன்ற வேடமிட்டு அவர்களை கொலுசாவடியில் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

இதற்காக 4 சிறுமிகள் மஹிஷாசுரவர்த்தினி, அபிராமி, பாலாம்பிகை, மீனாட்சி போன்ற கடவுள்களின் வேடங்கள் இட்டும், சிறுவன் ஒருவன் முருகன் வேடமிடும் கொலுவாக அமர்த்தி அவர்களை பொதுமக்கள் வழிபட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *