

மதுரை மாநகராட்சியின் மெத்தனபோக்கால் 2 வார்ட் வைகை 2 வது வீதியில் நோய் பரவும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 2 வது வார்ட் பகுதியில் கழிவு நீர் அகறப்படாததால் அப்பகுதியில் பலரும் நோய் தாக்குதலுக்கு உட்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 வது வார்ட் பகுதியில் வைகை வீதியில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் அகற்றும் தொட்டியில் அடிக்கடி கழிவு நீர் நிரம்பி விடுகிறது.



பலமுறை மாநகராட்சியில் முறையிட்டும் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவ்வப்போது மேம்போக்கான பாராமரிப்பு செய்வதால் சரியான முறையில் கழிவு நீர் அகற்றப்படுவதில்லை. 3 மாத காலமாக செப்டிக்டேங்க் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருகில் குளம்போல் தேங்கி கிடக்கிறது.எனவே 2 வது வார்ட் பகுதியில் பல தெருக்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் பலரும்பல்வேறு விதமான நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக 77 வயது முதியவர் கண்ணன் டெங்கு பாதிப்பால் வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மதுரை மாநகராட்சி தனது மெத்தனபோக்கை கைவிட்டு 2 வது வார்ட் பகுதியில் உடனே கழிவு நீரைஅகற்றி மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

