மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு விஷயத்தில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் மாநகராட்சி வருவாய் உதவியாளர்களும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்க கூட்டமைப்பு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வரின் கவன ஈர்ப்பு பெருந்திரள் முறையீடு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்களின் தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தன் மதுரை மாநகராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களில் கூட்டமைப்பின் சார்பாக தலைவர் முனியசாமி தலைமையில் செயலாளர்கள் முனியாண்டி முருகன்,பணி நீக்கம் செய்யப்பட்ட வருவாய் உதவியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.