• Sat. May 4th, 2024

மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கப்படவில்லை – தமிழக எம்.பி-க்கள் போராட்டம்..!!

ByA.Tamilselvan

Feb 2, 2023

தமிழக எய்ம்ஸ்க்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை என்பதை கண்டித்து செங்கல் ஏந்தி தமிழக எம்.பி.க்கள் டெல்லியில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24க்கான பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்ற தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, கையில் எய்ம்ஸ் என்று எழுதப்பட்ட செங்கல் ஏந்தி, நிர்மலா சீதாராமனை கண்டித்து தமிழ்நாட்டு எம்.பிக்களான மாணிக்கம் தாக்கூர், கார்த்தி சிதம்பரம், விஜய்வசந்த், செல்லக்குமார், ஞானதிரவியம், சு.வெங்கடேசன், நவாஸ்கனி உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர். கடந்த 2015- ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியானது. அதைத் தொடர்ந்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்டுமானப் பணிகள் எதுவும் ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *