• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திமுகவை எதிர்த்த மதுரை ஆதினம்

By

Sep 6, 2021 ,

விநாயகர் சதுர்த்தியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
தெரிவித்துள்ளார்.
விடுதலை போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மதுரை 293வது ஆதீனம் ஸ்ரீ லஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பாஸ் மார்க் வாங்காத மாணவர்கள் கூட டாஸ்மாக் போவதாக வேதனை தெரிவித்தார்.

“விநாயகர் சதுர்த்தி ஒரு சமயத்திற்கு உண்டான விழா அல்ல. இது ஒரு சமுதாய விழா. தேசபக்தி ஏற்படுத்திய விநாயகர் சதுர்த்தி. இந்த விழாவை அரசு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.