• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மா.கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்…

ByT.Vasanthkumar

Jan 13, 2025

எளம்பலூர் கிராமத்தை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மா.கம்யூனிஸ்ட் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.

மனுவில், பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சியில், கல் உடைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், கட்டிட தொழிலாளர் ஆகியோர் வசித்து வருகின்றனர். எளம்பலூரில் எந்த வணிக வர்த்தகமும் கிடையாது.இங்கு 100 நாள் வேலையை நம்பியே அதிக குடும்பங்கள் உள்ளனர். விவசாயம் அதிகம் உள்ள பகுதியாகும் ஆகவே இந்த எளம்பலூர் ஊராட்சியை பெரம்பலூர் நகராட்சியுடன் இணைப்பதால் கிராமத்தை சேர்ந்த அனைவரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் வசிக்கும் பெண்களும் ஆண்களும் தொழில்களை இழந்தும், பிள்ளைகளின் படிப்பை இழந்தும் சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு குடும்பத்தோடு கிராமத்தை விட்டு வெளியோரும் நிலைமைக்கு தள்ளப்படுவார்கள். ஆகவே மாவட்ட ஆட்சியர், தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று எளம்பலூர் கிராம ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கலையரசி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் எளம்பலூர் கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.