• Fri. Mar 29th, 2024

நெல்சனின் பீஸ்ட் பட ட்ரோல்களுக்கு நச்சுன்னு பதிலிளித்த லோகேஷ் கனகராஜ்…

Byகாயத்ரி

Jun 11, 2022

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து, கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ படத்தை இயக்கியதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார்.

இந்த படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. சமீபத்தில் இவர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் ரிலீசானது. இந்த திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல வசூலை குவித்து வருகிறது. இதனையடுத்து, சமீபத்தில் ரசிகர்களுடன் லோகேஷ் கனகராஜ் டிவிட்டர் பக்கத்தில் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், ‘நெல்சன் மற்றும் பீஸ்ட் படத்தின் ட்ரோல்ஸ் பற்றி உங்கள் கருத்து என்ன?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், ”இயக்குனர் நெல்சன் எனக்கு நல்ல நண்பர். எப்போதும் ஜாலியாக பேசக் கூடியவர். அவரைப் பற்றிய ட்ரோல்களைப் பார்க்கும்போது மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது. மேலும் வெற்றி பெறும்போது எல்லாம் கொண்டாடிவிட்டு தோல்வி அடையும்போது இந்த மாதிரி கடுமையாக விமர்சிப்பது கொஞ்சம் தவிர்க்கலாம்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *