• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அல்லு அர்ஜனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்

Byகாயத்ரி

Jun 19, 2022

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனக ராஜ். இவர் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிய விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியாகிய இந்த படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யின் “தளபதி 67” திரைப்படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைபடத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லுஅர்ஜுன் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிற்து. இதற்கு முன்பாக தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரபாஸ் போன்றோரிடம் லோகேஷ்படம் பற்றிய கதை விவாதத்தில் ஈடுப்பட்டதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.