• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

லிஸ் டிரஸ் ராஜினாமா… அடுத்த பிரதமராக ரிஷிசுனக் முன்னிலை

ByA.Tamilselvan

Oct 21, 2022

பிரிட்டன் பிரதமர் லிஸ்டிரஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷிசுனக் வர வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக, பிரதமர் லிஸ் டிரஸ் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.பதவியேற்ற 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்ததால், இங்கிலாந்தின் வரலாற்றில் மிகக்குறுகிய காலம் பதவியில் இருந்த பிரதமர் என்ற பெயரை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.
இந்த சூழலில் தற்போது அடுத்த பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ரிஷி சுனக்கிற்கு தற்போது 55% வெற்றி வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.அதே சமயம் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட மேலும் பலர் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால், பிரிட்டனின் பிரதமராக பதவியேற்கும் முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.