• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்

ByA.Tamilselvan

Apr 1, 2023

தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நிதிநிலைக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். கோவில்பட்டி, பழனி, கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார். இதன்படி திண்டுக்கல்லை பிரித்து பழனி தலைமையில் புதிய மாவட்டம், தூத்துக்குடியை பிரித்து கோவில்பட்டி தலைமையில் புதிய மாவட்டம், தஞ்சையை பிரித்து கும்பகோணம் தலைமையில் புதிய மாவட்டம், உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.