• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

வாகன சோதனையில் சிக்கிய மதுபான பாட்டில்கள்..,

BySubeshchandrabose

Mar 27, 2026

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு விட்டதால் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

உரிய ஆவணம் இன்றி 50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச் செல்லும் பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று தேனி அருகே அரண்மனை புதூர் பகுதியில் உள்ள மதுரை சாலையில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்

இதில் சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மதுபான பாட்டில்கள் இருந்துள்ளது இது குறித்து வாகன ஓட்டுனரிடம் விசாரித்த போது டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு எடுத்துச் செல்வதாக தெரிவித்தார்

பின் ஆவணங்கள் அனைத்தும் சரி பார்க்கப்பட்டு முறையாக இருந்த நிலையில் மதுபானம் ஏற்றி வந்த வாகனத்தை அனுப்பி வைத்தனர்

தொடர்ந்து அப்பகுதியில் சென்ற வாகனங்கள் அனைத்திலும் தீவிர சோதனை நடத்தினர்.

இதில் தேர்தல் பறக்கும் படையினர், மத்திய துணை ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.