

அரசரடி பகுதியில் மதுரை மத்திய சிறையில் இருந்து ஆயுள்சிறைவாசி தப்பிய விவகாரம் காவலர் இன்று சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் தாமரைக்குளம் கவிஞா் கண்ணதாசன் தெருவைச் சேர்ந்த ஆதி என்ற அருண்குமார் (49). இவா் ஈரோடு மாவட்டம் சித்தோடு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் அருண்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து 2021 அக்டோபா் 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது.இதையடுத்து மதுரை மத்தியச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண்குமார், அங்கு தோட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.இதில் சிறை அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்றதால் சிறையின் வெளிப்புறம் உள்ள பகுதிகளில் அருண்குமாரை தோட்ட வேலைகளில் ஈடுபடுத்திவந்துள்ளனா்.
இந்நிலையில் நேற்று சிறையின் வெளிப்புற வளாகத்தில் உள்ள தோட்டத்தில் அருண்குமார் வேலை பார்த்துகொண்டிருந்தபோது திடீரென அருண்குமார் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.
இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக சிறைக்காவலா் பழனிகுமார் மீது பணியில் கவனக்குறைவாக இருந்ததாக சஸ்பென்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.