கோவையில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது :-
கோவையில் தந்தை பெரியார் பெயரில் 7 ஏக்கர் பரப்பில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டுமான பணிகள் ரூ 300 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இந்த திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். அப்போதே நூலகம் வரும் 2026 ஜனவரியில் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். எனவே, முதல்வர் அறிவித்த காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் அதற்கான திட்டங்களை திட்டி ஒவ்வொரு மாதமும் என்னென்ன பணிகள் நடக்கிறது. என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நூலகம் நீண்ட நாள் நீடித்து இருக்கும் வகையிலும், தரமானதாகவும் தயாராகி வருகிறது இதற்கான அனைத்து கட்டிட அனுமதி சான்றிதழ்களும் பெறப்பட்டு உள்ளது. ரூ.300 கோடியில் அமையும் நூலகத்தில் ரூ.250 கோடி கட்டிட பணிக்கும், ரூ. 50 கோடி புத்தகம், கணினி போன்றவைக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

நூலகத்தில் தரை தளம் இல்லாமல் 7 தளங்கள் இருக்கும் 200 கார்கள், 450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும், முதல் இரண்டு தளங்களுக்கு எக்ஸ்லேட்டர் வசதியும், மற்ற தளங்களுக்கு லிப்ட் வசதியும் செய்யப்பட்டு வருகிறது. இங்கு சுமார், 300 பேர் அமரும் வகையில் கலையரங்கம், குழந்தைகள் நூலகம் தமிழ் மொழிக்கு என தனிப்பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகளில் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. திட்டமிட்டப்படி ஜனவரி மாதம் நூலகம் திறக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் 100 ஆண்டுகள் மட்டுமின்றி முகலாயர்கள் காலத்திலான பழமையான கட்டிடங்கள் வரை புனரமைக்கும் பணிகள் தடந்து வருகிறது. இந்த கட்டிடங்கள் அந்த காலத்தில் கட்டப்பட்டது போல் பழமை மாறாமல் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடங்கள் சுண்ணாம்பு கலவை போன்றவை பயன்படுத்தி கட்டப்பட்டு வகுவதால், இது போன்ற கட்டிடங்கள் கட்ட காலதாமதம் ஏற்படுகிறது. இதளை அவசரமாக கட்டி முடிக்க முடியாது சுட்டிட உறுதியில் சுவனம் செலுத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல் அண்ட்டி பைபாஸ் சாலை தொடர்பாக, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து அழுத்தம் அளிக்கப்பட்டதன் விளைவாக தற்போது ஒப்புதல் அளித்து உள்ளனர். இந்த சாலையை எடுக்க முடிவு செய்து கடந்த 1-ம் தேதி கு /99 கோடி பணம் அளித்தது. இந்த சாலையை எடுத்தவுடன் மாநில அரசிடம் ஒப்படைக்க கடிதம் அளித்து உள்ளோம்.

இதனை வருங்காலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. சாலையை மாநில அரசு எடுத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில், 27கி.மீ தொலைவுக்கு ஒன்றிய அரசு சாலை அமைத்து கொடுத்தாலும், அந்த பணியை நாங்கள் ஆய்வு செய்வோம். கோவை மேற்கு புறவழிச்சாலை பணிகள் மூன்று கட்டமாக நடக்கவுள்ளது. இதில் முதல்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இரண்டாவது கட்டத்திற்கு 98 சதவீதம் நிலம் எடுப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. மே மாதம் ஒப்பந்தம் போட வாய்ப்பு உள்ளது. பின்னர், இரண்டாம் கட்ட பணிகள் நடக்கும் மாவட்ட நிர்வாகம் மூலம் 3-ம் கட்ட பணிக்கான நில எடுப்பு நடந்து வருகிறது.

இது முடிந்தவுடன் தான் கிழக்கு புறவழிச்சாலை பணி தொடர்பாக தடவடிக்கை எடுக்க முடியும். அவினாசி மேம்பாலம் பணிகளில் 3 பில்லர்கள் அமைக்க வேண்டும். ரயில்வேயிடம் என்ஓசி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் என்ஓசி வழங்கிய 2 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும். இது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் ஆய்வு கூட்டம் வரும் திங்கட்கிழமை நடக்கிறது. தண்ணீர்பந்தல் மேம்பாலம் பணி நீதிமன்ற வழக்கில் உள்ளது. நீலிகோணம்பாளையம் மேம்பாலம் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
