• Sat. Feb 28th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

‘எங்களை வாழவிடுங்கள்’ – சொப்னா

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சொப்னாவுக்கு சமீபத்தில் எச்ஆர்டிஎஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரியாக வேலை கிடைத்தது.
கடந்த வாரம் அந்தப் பணியில் அவர் சேர்ந்தார். ஆனால் மறுநாளே அவரை பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து சொப்னா கூறியதாவது இப்போது ஏற்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் தான் காரணமாகும்.

அவர் தவிர வேறு யாரும் எனக்கு எதிரி கிடையாது. என்னை மட்டுமே நம்பித்தான் என்னுடைய குழந்தைகளும், வயதான தாயும் உள்ளனர். என்னையும் அவர்களையும் தயவுசெய்து வாழவிடுங்கள். நான் யாருடைய வாழ்க்கையிலும் குறுக்கிட மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.