• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ஒரு குட்டி கதைசொல்லட்டுமா . . . ஓபிஎஸ் ஆக்ஷன். . .இபிஎஸ் அப்செட்

அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னை சேத்துப்பட்டில் இன்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள தேவாயலம் அருகில் இருந்த ஆதரவற்ற இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓபிஎஸ் தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்தால் அவர்களை ஏற்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பேசியுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

அதிமுகவில் இருந்த சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற நிலையில் அவர் கட்சியின் பொது செயலாளர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவர் தற்போது விடுதலையாகி வந்துவிட்ட நிலையில், தான் மீண்டும் அதிமுகவை மீட்டெடுப்பேன் என்று பேசி வருகிறார். தன்னை பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளையும் தினமும் விடுத்து வருகிறார்.

ஆனால், அதிமுக மேலிடம் அவரை ஏற்க தயக்கம் காட்டி வருகிறது.. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் சசிகலா கட்சிக்குள் வருவதை விரும்பவில்லை.ஆனால், முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவுக்கு மறைமுகமாக ஆதரவை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை கட்சிக்குள் சேர்த்து கொள்வது குறித்து ஓபிஎஸ் சூசகமாக தன்னுடைய விருப்பத்தை 2வது முறையாக வெளிப்படுத்தி உள்ளார். இந்த செயல் எடப்பாடிக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாக அரசியல் வட்டரதினர் கூறிவருகின்றனர். ஓபிஎஸ் மேற்கோள் காட்டி கூறியதும் சற்று சந்தேகத்தை தான் ஏற்படுத்தி உள்ளது. கதை வேறொருவருடையது அதில் இப்படி என்று கடைசியாக ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தை தூண்டிவிட்டு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி அதிமுக – சசிகலா இணைப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள ஒரு தரப்பு வேலைபார்த்து வருவதாகவும் ஒரு சில தகவல்கள் தெரிவிக்கின்றனர்.