• Tue. Dec 16th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அத்திக்குன்னா தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை

நீலகிரி மாவட்டம் அத்திகுன்னா தேயிலை தோட்டத்தில் இறந்த கிடந்த சிறுத்தை குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனச்சரகம் காவல் பகுதிக்கு உட்பட்ட அத்திக்குன்னா தேயிலை தோட்ட பகுதியில் ஒரு சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உதவி வனப்பாதுகாவலர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, மாவட்ட வன அலுவலர் மற்றும் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அறிவுரையின் படி முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் . ராஜேஷ்குமார் தலைமையில் கொளப்பள்ளி, நெலாக்கோட்டை கால்நடை மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்னிலையில் இறந்த நிலையில் இருந்த ஆண் சிறுத்தைக்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டு, மாதிரிகள் சேகரம் செய்யப்பட்டது. பின் சம்பவ இடத்திலேயே ஆண் சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.