இராஜபாளையம் தொகுதியில் இன்று (20.04.2025) காலையில் இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து (2024-2025) 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் முத்துச்சாமியாபுரம் ஊராட்சி காமராஜர் நகரில் அமைக்கப்பட்ட நிழற்குடையும், சொக்கநாநன்புத்தூர் ஊராட்சியில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகக்கட்டிடத்தையும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் திறந்து வைத்தார்.


அதனைத்தொடர்ந்து சொக்கநாதன்புத்தூர் ஊராட்சியில் குத்தாலம் நினைவு கபாடிக்குழு மற்றும் விண்மீன் கிரிக்கெட் கிளப் இணைந்து நடத்தும் 14 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் மின்னொளி கபடிப் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிக்கு முதல் பரிசான 25,000 ரூபாயையும் வெற்றி கோப்பையும் வழங்கினார்.

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் கிளைச்செயலாளர்கள் சின்னதம்பி, தங்கப்பன், அமுரசன், சீதாராமன், வைரவன், ராணி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
