



நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா கோகூர் ஊராட்சியில் சட்டப் பணிக்குழு நடத்தும் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று கோகூர் அரசு பள்ளியில் சிறப்பான முறையில் நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக நீதிபதி மாண்புமிகு மோகனப்பிரியா மற்றும் மாவட்ட குழந்தைகள் நலன் அலுவலர் திருமதி வினோதினி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இதில் சட்டத்தின் முக்கியம் குறித்து பல கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். விழாவின் ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் திரு.மெய்கண்ட செய்து இருந்தார். நீதிபதி அவர்களுக்கு சமூக ஆர்வலர் திருமதி.விஜயலெட்சுமி அவர்கள் சால்வை அணிவித்தார். இவ் முகாமில் பொதுமக்கள் மற்றும் மாணவ/மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்கள்.


