• Thu. May 16th, 2024

குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை…

BySeenu

Oct 28, 2023

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் மாளிகையில் இருக்கும் அதிகாரிகள் இது போன்று முன் பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைக்கு எடுக்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர். ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் முன்பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையில் பொதுமக்கள் அமைதி ஊரு விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கப்படுவதாக தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். கடந்த 25 ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இது தொடர்பாக நிகழ்விடத்திலேயே கருக்கா வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்தி குறிப்புகளில் முதலில் ஒன்றுக்கு மேற்பட்டவர் சமம்பவதில் ஈடுபட்டதாகவும் ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாகவும் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்று விட்டதாகவும் செய்தி வெளியிட்டு பின்பு மீண்டும் ஒருவர் மட்டும் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் ஒன்றுக்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டுகள் வீசி சேதம் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் அவசரமாக நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
உண்மையில் ஒரே ஒரு நபர் மட்டுமே எதிர்ப்புறம் இருந்து பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசி அது ஆளுநர் மாளிகைக்கு வெளியே சாலையில் வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் தடுப்பில் பட்டு கீழே விழுகிறது. அந்த நபர் உள்ளே செல்ல முயலவில்லை அதற்குள்ளாக தமிழ்நாடு அரசின் காவல்துறையால் கைது செய்யப்படுகிறார். உண்மை சம்பவத்தை மறைத்து ஆளுநரின் மாளிகையில் இருக்கும் பொறுப்பு மிக்க அதிகாரிகள் இதுபோன்று முன் பின் முரணாக பொய்யான செய்தி வெளியிட்டு அதன் மூலம் இருவேறு சமூகங்களுக்கு இடையே கலவரம் ஏற்படும் வகையிலும் பொதுமக்களின் அமைதிக்கு ஊர் விளைவிக்கும் வகையில் செய்தி வெளியிட்டு இருப்பது வன்மையாக கண்டிக்கப்படுவதோடு சட்டபடி நடவடிக்கைக்கு உட்பட்டதே என தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *