கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் , அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
தொழிலாளர் துரோக சட்டத்தை நவ 21 முதல் அமல்படுத்த ஏற்பாடு செய்துள்ளது எனவும், நாடாளுமன்றத்தில் இது நிறைவேற்ற பட்டாலும் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்த நிலையில் அமல்படுத்தாமல் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது அவசர அவசரமாக இந்த சட்டத்தை ஒன்றியம் கொண்டு வந்து இருக்கின்றது எனவும் இதை எதிர்த்து இன்று இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்துகின்றன எனவும் தெரிவித்தார்.

19 தொழிலாளர் சட்டங்களை முற்றிலும் அழித்து விட்டு , 4 தொகுப்புகளாக சட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இந்த புதிய சட்டத்தின் மூலம்
20 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் தொழில்சாலை என்பதை 40 ஆக மாற்றிவிட்டனர் எனவும்,இந்த புதிய தொழிலாளர் சட்டம் எந்த விதமாகவும் தொழிலாளர்களுக்கு பலனளிக்காது எனவும் தெரிவித்தார்.

பணிக்கொடை நோக்கத்தையே இந்த சட்டம் சிதைத்து விட்டது,
சங்கம் அமைக்கும் உரிமை என்பது முக்கிய உரிமை, பணிபுரியும் காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க முடியும் எனவும், புதிய சட்டத்தின் கீழ் சங்கம் அமைக்கும் உரிமையும் மறுக்கப்படுகின்றது என தெரிவித்தார்.தொழில் சங்கத்தின் அங்கீகரத்தை புதிய சட்டத்தால் ரத்து செய்து விட முடியும் ,
சுரங்கம், இராசாயன தொழில்சாலைகளில் பெண்களை ஈடுபடுத்த கூடாது என இருக்கும் நிலையில் புதிய சட்டத்தில் அவர்களையும் ஈடுபடுத்தலாம் என சொல்கின்றது எனவும் தொழிலாளர் நல நிதி 10 சதவீதமாக குறைக்கப பட்டுள்ளது எனவும், கட்டுமான வாரியத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிதி முழுவதும் ஒன்றிய அரசுக்கு புதிய சட்டம் மூலம் மாற்றப்படுகின்றது எனவும், தொழிலாளர் துரோக சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கின்றது எனவும் குற்றம்சாட்டினார். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக இந்த சட்டங்களை கொண்டு வந்து இருக்கின்றனர் எனவும் ஒன்றிய அரசு ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை கொண்டு வருகின்றது, தொழிலாளர்களை பிளவுபடுத்த முயற்சிக்கின்றது, தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை இருக்க கூடாது என்ற எண்ணத்தில் இந்த புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வந்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
இந்த தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், அது வரை தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்த அவர், டெல்லியில் நடத்த விவசாயிகள் போராட்டம் போல, ஒரு போராட்டத்தை ஒன்றிய அரசு சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல முயற்சி எடுத்தும் பா.ஜ.கவால் கால் ஊன்ற முடியவில்லை எனவும், பல வழிகளில் திமுக ஆட்சியை அகற்ற தீவிரமாகவும் கவனமாகவும் இருக்கின்றனர் எனவும், கடவுளின் பெயரால் தீவிரவாதத்தை செயல்படுத்த முயல்கின்றனர் எனவும் தெரிவித்தார். திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் ஜெ தலைமையிலான அரசும் ,நீதிமன்றமும் ஏற்கனவே நிராகரித்த ஒன்றை, இப்போது மீண்டும் சாமிநாதன் என்ற நீதிபதி மூலம், கலவரத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் அவர்கள் குறிப்பிடும் இடத்தில் இருப்பது தீபக்கல்லே கிடையாது, அது அளவு கல் எனவும் தெரிவித்த அவர், மக்கள் பிளவுபடுவதை எந்த ஜனநாயகவாதியும் ஏற்க மாட்டான் எனவும் தெரிவித்தார்.
கலவரத்தை கொண்டு வர வேண்டும் என நீதிமன்றமும் , ஆர்எஸ்எஸ் கும்பலும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர் எனவும்
தமிழக அரசு கவனத்துடன் இதில் செயல்பட்டுள்ளது, இது போன்ற கலவரங்களை தமிழக மக்கள் ஆதரிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் கலவர சூழலை ஏற்படுத்த முயல்கின்றார். சட்டம் ஒழுங்கு பிரச்சினையைற ஏற்படுத்த முயல்கின்றார் எனவும் தெரிவித்தார். கோவையில் அரசு உதவி பெறும் கல்லூரியில், சரஸ்வதி நாகரீகம் என்ற தலைப்பி்ல் கருத்தரங்கு நடத்த இருக்கின்றனர் எனவும், இதில் ஆளுநர் கலந்து கொண்டு பேச இருக்கின்றார் எனவும், அவர் என்ன பேசுவார் என அனைவருக்கும் தெரியும் எனக்கூறிய அவர், இந்த நிகழ்சியை நடத்த கூடாது என புகார் மனு கொடுத்து இருக்கின்றோம், மாநில அரசு இந்த கருத்தரங்கம் அனுமதி அளிக்க கூடாது எனவும், மீறி கூட்டம் நடத்தப்பட்டால் அனைத்து கட்சிகளின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும் முத்தரசன் தெரிவித்தார்.
திருப்பரங்குன்ற விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கொள்கையை கைவிட்டு ஆர்.எஸ்.எஸ் சொல்வதை ஏற்கின்றார் என தெரிவித்த அவர், நீதிபதிகளை எச்.ராஜா எப்படி பேசினார், இதை எப்படி அனுமதிக்கின்றனர் என தெரியவில்லை. கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதை தவிர என்ன காரணம் இருக்கின்றது எனவும் கேள்வி எழுப்பினார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில்தான் தீபம் ஏற்றப்பட்டது என தெரிவித்த அவர், தீர்ப்பை விமர்சிப்பதற்கு எல்லாருக்கும் உரிமை உண்டு எனவும் தெரிவித்தார்.
நீதிபதியும்,ஆர்.எஸ்எஸ் கும்பலும் கூட்டணி சேர்ந்து இருக்கின்றனர் என நான் சொல்கின்றேன், சட்டரீதியான நடவடிக்கை எடுங்கள் அதை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.நீதிபதிகள் ஒரு சார்பு நிலை எடுக்க கூடாது, ஆனால் இவர் சார்பு நிலை எடுக்கின்றார் எனவும் நீதிபதி சாமிநாதனை குறிப்பிட்டு பேசினார்.

காங்கிரஸ் தொடர்பான கேள்விகளை செல்வபெருந்தகையிடம் கேட்டால் சரியாக இருக்கும் என தெரிவித்த அவர், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி 10 ஆண்டு காலமாக இருக்கின்றது, இது கொள்கை கூட்டணி எனவும், இதற்கு முன்பு கூட்டணிகள் ஓரு வருடத்தில் உடைந்து விடும் , ஆனால் 10 ஆண்டுகளாக இந்த கூட்டணி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
ஜெ முதல்வராக இருந்த போது இதே பிரச்சனை வந்த போது ,நீதிமன்றத்தின் மூலமாக தடுத்து நடவடிக்கை எடுத்தார் என தெரிவித்த அவர், துரதிஷ்டவசமாக ஜெயலலிதாவை கடவுளாக எண்ணும் எடப்பாடி பழனிச்சாமி திருப்பரங்குன்ற விவகாரத்தில் பா.ஜ.க வை ஆதரிக்கின்றார், பா.ஜ.க என்ன சொன்னாலும் கேட்கும் பரிதாப நிலைக்கு அவர் போய் விட்டார் எனவும் தெரிவித்தார்.
தேர்தலில் எல்லா கட்சிகளும் கூடுதல் இடத்தை கேட்பதை விரும்புவார்கள், தேர்தல் தேதி அறிவித்த பின்பு குழுக்கள் அமைத்து எண்ணிக்கை முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்தார்.இந்திய தேர்தல் ஆணையம் சொந்த புத்தியில் செயல்பட வேண்டும்
ஆனால் அப்படி செயல்பட வில்லை எனவும் குற்றச்சாட்டினார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு எல்லா நடவடிக்கையும் எடுத்து வருகின்றது என தெரிவித்த அவர், எடப்பாடி பழனிச்சாமியை மாதிரி டி.வியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என முதல்வர் ஸ்டாலின் சொல்ல வில்லை எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்தார்.




