மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு, உத்தரவுபடி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிக்குழு சார்பாக,
சட்ட விழிப்புணர்வு முகாம் கருத்தரங்கு நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். உதவித் தலைமை ஆசிரியர் பிரேமா முன்னிலை வகித்தார். கணினி ஆசிரியர் கார்த்திக் வரவேற்றார். பள்ளி நில நன்கொடையாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தொகுத்து வழங்கினார். இந்த கருத்தரங்கில், வட்டச்சட்ட பணிக்குழு வழக்கறிஞர்கள் தயாநிதி, சீனிவாசன், சுமீதா ஆகியோர் பெண்களுக்கான சட்டங்கள், பாதுகாப்பு, விழிப்புணர்வு, தற்காப்பு வழிமுறைகள் பற்றி விளக்கிப் பேசினர்.
இந்த கருத்தரங்கில், வட்டச் சட்டப்பணிக் குழு தலைவர் நீதிபதி ராம் கிஷோர் கூறியதாவது:-
அன்புள்ள மாணவிகளே, உங்களுக்கு நீங்கள்தான் போட்டியாளர்கள் உங்களுடன் நீங்களே போட்டி போடுங்கள். இந்த உலகம் மிகப் பெரியது அதில், தினந்தோறும் எதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செய்யுங்கள். அப்படி திட்டமிட்டது நடக்கவில்லை என்றால், மீண்டும் முயற்சி செய்து செயல்படுங்கள். நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை குறிக்கோளாக கொண்டு
செய்ய வேண்டும். தற்போது, போட்டி தேர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில் 700 காலிப்
பணியி டத்திற்கு சுமார் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள். இதில் வெற்றி பெற்று ஒருவராக வர வேண்டும். அவருக்கு முழு முயற்சியோடு பயிற்சியோடு
படிக்க வேண்டும்.
நம் வாழ்க்கையில் பலவித கட்டங்கள் உள்ளது.அதில் ,ஒன்றில் மட்டும் நின்று கொள்ளாமல், அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிநகர்ந்து சென்று கொண்டே இருக்க வேண்டும்.
படிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துங்கள் அதுவும் குறிப்பாக செய்தித்தாள்களை தினந்தோறும் படிக்கும் பழக்கம் வேண்டும் .
அதில் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகள் அதிகம் இருக்கும். மேலும், அதில் நாட்டில் வீட்டில் ஊரில் உலகில் நடைபெறும் சம்பவங்கள் நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வொன்றும் உங்களுக்கு அனுபவம் தான். அறிவை படித்து கற்றுக் கொள்ளலாம். அனுபவத்தை பெற்ற பின்பு தான் கற்றுக் கொள்ள முடியும். அனுபவம் உள்ளவர்
களிடமிருந்து கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் மனதில் பட்டதை சரியா,தவறா என்பதை அனுபவமுள்ள உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் மற்றும் தாய் தந்தையரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தின் முடிவில், கார்கில் போரில் உயிர் நீத்த தியாகிகள் தினயொட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன் நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை வட்ட சட்டப்பணிக்குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
தினந்தோறும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளுங்கள்: மாணவிகளுக்கு நீதிபதி அறிவுரை…
