• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வேகமெடுக்கும் மலையாள முன்ணனி நடிகர் திலீப் வழக்கு

கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் திலீப், மலையாள நடிகை பாவனாகடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி, சிறை சென்று, பின் ஜாமினில் வெளிவந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

ஆனால் வழக்கு திடீரென சூடு பிடிப்பதும், பின்னர் அப்படியே அமுங்கிப்போவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதனால் திலீப் நிம்மதியாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில் இந்த வழக்கில் மீண்டும் திலீப்பிடம் விசாரிக்க நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டு மனு செய்துள்ளனர் கேரள போலீஸார். சமீபத்தில் இயக்குனர் பாலசந்திர குமார் என்பவர், நடிகை காரில் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட வீடியோவை திலீப் தனது காரில் அமர்ந்தபடி பார்த்தார்.

அந்த வீடியோவை ஒரு விஐபி தான் அவரிடம் கொடுத்தார் என பரபரப்பு தகவல் ஒன்றை கூறினார்.நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வீடியோ திலீப் பார்வைக்கு எப்படி வந்தது, பாலசந்திர குமார் சொல்வது உண்மையா என்கிற கோணத்தில் விசாரிக்க இந்த வழக்கை மீண்டும் போலீஸார் தூசு தட்ட தயாராகி வருகின்றனர். இது திலீப்புக்கு புதிய சிக்கலை கொண்டுவருமா அல்லது வழக்கம்போல புஸ்வானம் ஆகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.