பெண் குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் அதிக பெண்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது தமிழகமே என்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன் பாஸ்கரன் பெருமையுடன் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் மாநில பொதுக்குழுவின்
இரண்டு நாட்கள் கூட்டம் சங்கத் தலைவர் பொன் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள 25 மாவட்டங்களின் தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழக அரசின் ஆதரவு அதிகரிப்பு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தலைவர் பொன் பாஸ்கரன், குத்துச்சண்டை விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பெரும் ஆதரவு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் மட்டும் குத்துச்சண்டை கழகத்தின் மூலம் பயிற்சி பெற்ற 6 வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது.மேலும், ரயில்வே துறையில் 8 வீரர்கள் நியமனம் பெற்றுள்ளனர். சென்னையில் இரண்டு புதிய பயிற்சி மையங்களை அமைக்க மாநில அரசு நிதியுதவி வழங்கி வருகிறது என்றும் அவர் கூறினார். புதிய பொறுப்பாளர் தேர்வு கழகத்தின் புதிய குரூப் செயலாளராக தஞ்சை மாவட்டத் தலைவராக பணியாற்றி வந்த ஜலேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இந்த பொறுப்பில் இருந்த இப்ராஹிம் விடுவிக்கப்பட்டார்.

கல்வி நிறுவனங்களின் பங்கு தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பல பள்ளி, கல்லூரிகள் இதற்கு உறுதுணையாக உள்ளன. இளைஞர்களின் ஆர்வம் அதிகரிப்பு சமீபத்திய தமிழ்த் திரைப்படங்களில் குத்துசண்டை காட்சிப்படுத்துவது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு குத்துச்சண்டை பயிற்சிபெறவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.








