• Fri. Apr 26th, 2024

வாடிக்கையாளர்களை மைலேஜ் சேலஞ்சுக்கு அழைத்து பரிசு வழங்கிய முன்னனி நிறுவனம்.

Byகுமார்

Jul 3, 2022

பெட்ரோல், டீசலின் விலை நாலு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அதிக மைலேஜ் தரக்கூடிய இருச் சக்கர, நான்கு வாகனங்களை மக்கள் வாங்கி பயன்படுத்த துவங்கியுள்ளனர். மக்கள் மத்தியில் தங்கள் நிறுவன இருச் சக்கர மைலேஜை காட்டும் விதமாக யமஹா இந்தியா நிறுவனம் சார்பில் “மைலேஜ் சேலஞ்ச்” என்ற நிகழ்ச்சி மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட 125 சிசி ஸ்கூட்டர் வைத்திருந்த அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பங்கேற்று முப்பது கிலோ மீட்டர் வரையிலான பயணத்தை மேற்கொண்டனர். இந்த பைக்குகளுக்கு அந்நிறுவனம் சார்பில் பெட்ரோல் டேங்க் முழுவதும் நிரப்பப்பட்டு பின் அவர்கள் மீண்டும் பந்தைய இடத்திற்கு வந்த பிறகு பெட்ரோல் பங்கை டாப் அப் செய்து எந்த அளவுக்கு எரிபொருள் சிக்கனமாகவும் அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் வாகனத்தை இயக்கியுள்ளார் என்பதன் அடிப்படையில் முதல் ஐந்து நபருக்கு பரிசு அளித்து அந்நிறுவனம் பாராட்டி உள்ளது.


இதில் 105 கிலோ மீட்டர் மைலேஜ் என்கிற அளவில் முதல் ஆள் வாகனத்தை நிதானமாக இயக்கி இருந்தார். இனிவரும் காலங்களில் எரிபொருள் சிக்கனம் மிகவும் அவசியம் என்ற நோக்கத்தை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அந்நிறுவனத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *