• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

*பாகிஸ்தான் டிரெண்டிங்கில் ‘தலைவி’*

Byமதி

Oct 13, 2021

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘தலைவி’. ஏ.எல் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்ஜிஆராக அரவிந்த் சாமியும் நடித்திருந்தனர்.

சில தினங்கள் முன் இந்தப் படம் ஓடிடி வெளியீடப்பட்டது. இந்தி பதிப்பும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த கங்கனா, கூடவே பாகிஸ்தானின் நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 பட்டியலையும் பகிர்ந்தார். அந்தப் பட்டியலில், ‘தலைவி’ படமும் இடம்பெற்றிருந்தது. இதனை குறிப்பிட்டு, ‘ஒரு ஜாலியான குறிப்பு… துரோகிகள் நம் நாட்டில் மட்டும் இல்லை’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். ‘தலைவி’ படத்துக்கு ஓடிடியில் கிடைத்து வரும் வரவேற்பை சகித்துக்கொள்ளாதவர்களை ஜாலியாக கடுப்பேற்றும் நோக்குடன் அவர் இப்படி ஒரு கருத்தைப் பதிந்துள்ளார்.

இதனிடையே, செப்டம்பர் 25 அன்று நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் ‘தலைவி’ வெளியிடப்பட்டது. வெளியானதில் இருந்து இன்று வரை ட்ரெண்டிங்கில் டாப் 10-ல் இருந்து வருகிறது. ‘தற்போது டாப் 10 பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளது.