• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..!

ByKalamegam Viswanathan

Jul 24, 2023

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் தொடரும் கலவரம் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களை ஏற்படுத்தி வருகிறது. மணிப்பூர் சம்பவம் குறித்து அனைத்து கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தன்னார்வலர்களும் கண்டன ஆர்ப்பாட்டங்களை போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஒத்தக்கடை பகுதியில் உள்ள மதுரை உயர்நீதிமன்றம் முன்பு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆண்டிராஜ் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஆனந்தவள்ளி தலைமையில் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அன்பரசு மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணவேணி முன்னிலையிலும் பக்ரூஸ் ஜமான்,அஜ்மல் கான் ஹென்ட்ரி திபேன் ஷாஜி ஸ்ரீனிவாச ராகவன் ஜான் வின்சென்ட், மரிய வினோலா திருநாவுக்கரசு ஏபி தாஸ் உட்பட உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் ஏராளமானோர் மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பிய படி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.